close
Choose your channels

கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்னேஷ் சிவன்.. நயன்தாராவும் சென்றுள்ளாரா?

Wednesday, May 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேன்ஸ் திரைப்பட விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் பல இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டுள்ளதை அடுத்து அவர் இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த ஆண்டுக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகைகள் இஷா குப்தா, சீதாராமம் நடிகை மிருணாள் தாகூர், சாரா அலி கான், ஊர்வசி ரவுத்தேலா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஆனால் அவர் தனியாக சென்றாரா? நயன்தாராவுடன் சென்றாரா? என்பது தெரியவில்லை. அவர் பதிவு செய்துள்ள வீடியோவில் நயன்தாரா இல்லை என்பதை அடுத்து நயன்தாராவை அழைத்துச் சென்றீர்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நயன்தாராவுடன் கண்டு ரசித்த விக்னேஷ் சிவன் கண்டிப்பாக நயன்தாராவை கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அழைத்துச் சென்று இருப்பார் என்று தான் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் இனிமேல் பதிவு செய்யும் புகைப்படங்களில் நயன்தாரா இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.