close
Choose your channels

4 நடிகைகளின் படுக்கையறை, குளியலறை காட்சிகள்: விஜய்தேவரகொண்டா படத்தின் டிரைலர்

Friday, January 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தின் டிரைலர் சற்றுமுன் ரிலீசாகியுள்ளது. இந்த டிரைலரில் 4 நடிகைகளின் படுக்கையறை மற்றும் குளியலறை காட்சிகள் இருப்பதால் பயங்கர வைரலாகி வருகிறது.

அர்ஜூன் ரெட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ஒருசில வெற்றி படங்களை கொடுத்த விஜய் தேவரகொண்டா தற்போது நடித்து வரும் திரைப்படம் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷிகன்னா, கேத்ரின் தெரசா மற்றும் இசபெல்லா ஆகிய நான்கு நாயகிகள் விஜய்தேவரகொண்டா உடன் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இந்த படத்தின் டிரைலரில் விஜய் தேவரகொண்டா நான்கு நாயகிகளுடன் மாறி மாறி ரொமான்ஸ் மற்றும் படுக்கையறை காட்சிகள் உள்ளன. மேலும் குளியலறை காட்சிகள் உள்பட ரொமான்ஸ் மற்றும் ஒருசில ஆக்சன் காட்சிகள் இருப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படம் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.