close
Choose your channels

அஜித் எடுத்த அதே முடிவை எடுத்த விஜய் தேவரகொண்டா!

Sunday, May 9, 2021 • தமிழ் Comments

தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் கடந்த மே 1ஆம் தேதி அஜித்தின் ஐம்பதாவது பிறந்த நாளில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் இந்த நேரத்தில் ’வலிமை’ பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட வேண்டாம் என அஜீத் வேண்டுகோள் விடுத்ததன் காரணமாக ’வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது

இந்த நிலையில் அஜித் எடுத்த இதே முடிவை விஜய் தேவரகொண்டாவும் எடுத்துள்ளார். அவர் நடித்து வரும் ’LIGER’ என்ற படத்தின் டீசர் இன்று வெளியாக இருந்தது. ஆனால் தற்போதைய கொரோனா சூழ்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியிட விரும்பவில்லை என்றும், அதனால் டீசர் ரிலீஸ் தேதியை ஒத்திவைப்பதாக விஜய் தேவரகொண்டா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்

மேலும் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் அவர் அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார். அஜித் எடுத்த அதே முடிவை விஜய்தேவரகொண்டாவும் எடுத்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz