close
Choose your channels

டுவிட்டரில் விஜய்யின் செல்பி செய்த மகத்தான சாதனை!

Friday, September 18, 2020 • தமிழ் Comments

’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பி புகைப்படம் டுவிட்டரில் மிகப்பெரிய சாதனை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 2019ஆம் ஆண்டில் சினிமா துறையில் அதிகளவு ரீடுவிட் செய்யப்பட்ட போஸ்டர் என்ற பெருமையை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் நடித்து வந்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்தது. அப்போது அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூடி இருந்த நிலையில் ரசிகர்கள் அங்கிருந்த வேன் ஒன்றின் மீது ஏறி ரசிகர்களுடன் சேர்ந்து விஜய் ஒரு செல்பி எடுத்துக்கொண்டார்.

அந்த செல்பி புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். தற்போது இந்த செல்பி புகைப்படத்திற்கு ட்விட்டரில் அதிகளவில் ரீடுவிட் செய்யப்பட்ட நடிகர் ஒருவரின் புகைப்படம் என்ற பெருமை கிடைத்துள்ளது. இந்த புகைப்படத்திற்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரீடுவிட்டூகளூம், 3 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ்களும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அடுத்து விஜய் ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz