close
Choose your channels

2020ல் விஜய்யின் செல்பி செய்த சாதனை!

Tuesday, December 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான ரிலீஸ் பணிகளை படக்குழுவினர் தீவிரமாக செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்தது. மேலும் இந்த படத்தின் டிரைலர் வரும் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நெய்வேலியில் நடைபெற்றது என்பது தெரிந்ததே. அப்போது விஜய்யை பார்ப்பதற்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் கூடியது என்பதும் இதனையடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக விஜய் வேன் மீது ஏறி செல்பி ஒன்றை எடுத்து, அந்த செல்பி புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் விஜய் பதிவு செய்த இந்த செல்பி புகைப்படம் 2020 ஆம் ஆண்டில் மிக அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட பதிவு என்று டுவிட்டர் அறிவித்துள்ளது. இந்தியாவில் டுவிட்டரில் மிக அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட பதிவுகளில் நெய்வேலியில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பி முதலிடம் பிடித்து உள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்

இதேபோல் 2020ஆம் ஆண்டு அதிக லைக்ஸ்கல் பெற்ற டுவிட்டாக விராத் கோஹ்லி தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த டுவிட்டுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.