close
Choose your channels

'தளபதி 66' படத்தில் இணையும் ரூ.500 கோடி பட்ஜெட் படத்தின் ஒளிப்பதிவாளர்!

Monday, February 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வரும் படத்தின் ஒளிப்பதிவாளர் ’தளபதி 66’ படத்தின் ஒளிப்பதிவாளராக இணைய வாய்ப்பு கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ’ஆதிபுருஷ்’. ராமாயண இதிகாசத்தை தழுவி உருவாக்கப்படும் இந்த படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் ரூபாய் 500 கோடி தயாரிப்பு செலவில் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு நாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் கார்த்திக் பழனி என்பவர் ‘தளபதி 66’ திரை படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடித்த ’பென்குயின்’ என்ற திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தளபதி விஜய்யின் ’தளபதி 66’ திரைப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos