close
Choose your channels

தயாரிப்பாளராக மாறிய விஜய்யின் மேனேஜர்: முதல் படத்தின் நாயகி யார் தெரியுமா?

Monday, September 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யிடம் பல ஆண்டுகள் மேனேஜராக இருக்கும் ஜெகதீஷ் தயாரிப்பாளராக மாறி உள்ளார் என்பதும் அவரது முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தளபதி விஜய்யிடம் பல ஆண்டுகளாக மேனேஜராக இருப்பவர் ஜெகதீஷ். இவர் தற்போது தயாரிப்பாளராக மாறி உள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஃபேசன் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகிறார்

மலையாளத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ‘Sesham Mikeil Fathima’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த படத்தில் பிரபல நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்லது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ள நிலையில் அந்த போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்தில் தான் நடிப்பது மிகவும் பெருமைக்குரியதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். மனு சி குமார் என்பவரின் இயக்கத்தில் உருவாகும் என்ற படத்திற்கு அப்துல் வகாப் என்பவர் இசை அமைக்க உள்ளார்.

விஜய்ய்யின் மேனேஜர் ஜெகதீஷ் தயாரிப்பாளராக மாறியதை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos