close
Choose your channels

இத்தாலியில் சுற்றுப்பயணம் செய்து வரும் விஜய் பட நாயகி: வைரல் புகைப்படங்கள்!

Tuesday, April 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் படத்தில் நாயகியாக நடித்த நடிகை தற்போது இத்தாலியில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் அதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’மாஸ்டர்’. இந்த படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் தற்போது இத்தாலியில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் .

இத்தாலியில் உள்ள பல இடங்களில் குறிப்பாக ரோம் நகரில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.

நடிகை மாளவிகா மோகனன், தனுஷுடன் நடித்த ‘மாறன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது ’யுத்ரா’ என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.