close
Choose your channels

'வாரிசு' இசை வெளியீட்டு விழா: தனது போட்டியாளர் யார் என பகிரங்கமாக அறிவித்த விஜய்!

Sunday, December 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் தனது போட்டியாளர் யார் என்பதை பகிரங்கமாக அறிவித்தார். கடந்த 1990ஆம் ஆண்டு எனக்கு போட்டியாக ஒரு நடிகர் உருவாகினார் என்றும். அந்த நடிகரை முந்த வேண்டும் என்பதற்காகவே நான் கூடுதலாக உழைத்தேன். அவர் என்னை முந்த, நான் அவரை முந்த எங்களுக்குள் ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்தது

அந்த போட்டியாளர் யாரென்றால் ஜோசப் விஜய். உங்களுக்கு வேறு ஒருவரை போட்டியாளராக நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களை நீங்களே போட்டியாளர்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றும் அவர் கூறினார். வேறொருவரை போட்டியாளராக எடுத்துக் கொண்டால் உங்களுடைய உயரம் என்ன என்பது உங்களுக்கு தெரியாமல் போய்விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.