close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' படத்தில் இருந்து விலகினாரா விஜய்சேதுபதி?

Saturday, February 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமரர் கல்கி எழுதிய காலத்தால் அழியாத காவிய படைப்பான 'பொன்னியின் செல்வன்' வரலாற்று நாவலை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் விஜய் சேதுபதி, விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் உள்பட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிவிட்டதாக கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கும் இந்த படம் காலதாமதமாகி வருவதாகவும், அடுத்தடுத்து அதிக படங்களில் விஜய்சேதுபதி கமிட் ஆகி வருவதாலும் இந்த படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

'செக்க சிவந்த வானம்' படத்திற்கு பின்னர் மீண்டும் மணிரத்னம் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் இந்த படத்தில் இருந்து விலகியிருப்பதாக வந்துள்ள செய்தி அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மேலும் 'பொன்னியின் செல்வன்' நாவலை ரஜினியின் மகள் செளந்தர்யா வெப் தொடராக இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.