close
Choose your channels

விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி இதுவா?

Tuesday, March 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’துருவ நட்சத்திரம்’ படத்தின் பணிகள் நீண்ட கால தாமதத்திற்குப் பின்னர் சமீபத்தில் மீண்டும் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான திரைப்படம் ’துருவ நட்சத்திரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடந்த நிலையில் திடீரென கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி, முடிக்கப்பட்டது என்றும், விக்ரம் தனது பகுதியில் டப்பிங் பணியை கடந்த வாரம் முடித்தார் என்றும் செய்தி வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் ஜூன் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விக்ரம் நடித்து முடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படம் மே மாதம் ரிலீசாகவுள்ள நிலையில் ஒரே மாத இடைவெளியில் விக்ரமின் ’துருவ நட்சத்திரம்’ படம் வெளியாகும் என்பதால் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சி உள்ளனர் .விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், திவ்யதர்ஷினி, அர்ஜுன் தாஸ், ராதிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.