close
Choose your channels

கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம் விரைவில்!!

Thursday, August 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகம் ஏற்கனவே தயாராகி விரைவில் திரைக்கு வெளிவரவுள்ள நிலையில் அவருடைய இன்னொரு வெற்றிப்படமும் விரைவில் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அந்த சூப்பர் ஹிட் படம் 'பஞ்சதந்திரம்' என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ''பஞ்சதந்திரம்' படத்தின் 2ஆம் பாக கதையை ஒன்லைனில் கமல் சமீபத்தில் கூறியதாகவும் இதன் அடிப்படையில் விரைவில் இந்த படத்தின் முழு திரைக்கதையை உருவாக்கவுள்ளதாக கூறினார். பஞ்சதந்திரம்' படத்தின் நாயகிகள் தங்கள் கணவர்களை பழிவாங்குவதுதான் இரண்டாம் பாகத்தின் கதை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமான், யூகிசேது, சிம்ரன், ரம்யாகிருஷ்ணன், ஊர்வசி, சங்கவி உள்பட பலர் நடித்திருந்த 'பஞ்சதந்திரம்' கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.