close
Choose your channels

வரலட்சுமியின் அடுத்த பட சென்சார் தகவல்

Wednesday, March 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு நடிகை வரலட்சுமி, விஜய்யின் 'சர்கார்', 'விஷாலின் 'சண்டக்கோழி', தனுஷின் 'மாரி 2' உள்பட ஒருசில வெற்றிப்படங்களில் நடித்த நிலையில் தற்போது அவர் சுமார் 10 படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் ஒன்றான 'கன்னிராசி' படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'கன்னிராசி' படத்தை நேற்று பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனை வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விமல், வரலட்சுமி, பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், சாம்ஸ், ஷகிலா உள்பட பலர் நடித்துள்ள 'கன்னிராசி' படத்தை முத்துகுமரன் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவும், ராஜா முகமது படத்தொகுப்பு பணியும் புரிந்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.