close
Choose your channels

விஷால் -ஹரி படத்தின் நாயகி இவரா? அதிகாரபூர்வ அறிவிப்பால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Monday, July 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடிக்க இருக்கும் 34வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ’தாமிரபரணி’ ’பூஜை’ ஆகிய இரண்டு வெற்றி படங்களுக்குப் பிறகு மீண்டும் விஷால் மற்றும் ஹரி இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் நாயகி ஆக பிரியா பவானிசாகர் நடிக்க உள்ளார். பிரியா பவானி சங்கர் நடித்த படங்கள் அனைத்தும் வரிசையாக வெற்றி பெற்று வரும் நிலையில் ’விஷால் 34’ திரைப்படத்தில் அவர் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos