close
Choose your channels

ரஜினிகாந்த் - லோகேஷ் படத்தில் இணையும் 'லியோ' நடிகர்.. இதுவும் LCU படமா?

Monday, July 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் ‘லியோ’ படத்தில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவான ’ஜெயிலர்’ மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’லால் சலாம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தை அதாவது ’தலைவர் 171’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘லியோ’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த பாபு ஆண்டனி ’தலைவர் 171’ படத்தில் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது ’தலைவர் 171’ படமும் LCU படமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.