close
Choose your channels

டேஞ்சர் ஜோனில் 4 போட்டியாளர்கள்.. இந்த சீசனின் முதல் எலிமினேஷன் இவரா?

Friday, October 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த வாரம் முதல் எலிமினேஷன் நடைபெற உள்ளதை அடுத்து பார்வையாளர்கள் மத்தியில் முதல் நபராக வெளியேற்றப்படுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை கடந்த 5 சீசன்களில் முதல் நபராக வெளியேறும் போட்டியாளர் கொஞ்சம் வயதான போட்டியாளராக தான் இருப்பார். அனுயா, மமதி, பாத்திமா பாபு, ரேகா மற்றும் நாடியா ஆகியோர் கடந்த ஐந்து சீசன்களில் முதல் நபராக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் ஆவர். அந்த வகையில் இந்த வாரம் வெளியேறுவது இந்த சீசனில் வயதான போட்டியாளராக இருக்கும் நடன மாஸ்டர் சாந்தி என கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அசீம், ராம் ராமசாமி, தனலட்சுமி, ரச்சிதா, சாந்தி, குயின்ஸி, விக்ரமன், மகேஸ்வரி, ஆயிஷா, நிவாஷினி, சிவின் கணேஷ் மற்றும் ஷெரினா ஆகிய 12 போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் உள்ள நிலையில் இவர்கள் பெற்ற வாக்குகள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஷெரினா, ஷிவின், விஜே மகேஸ்வரி மற்றும் சாந்தி ஆகிய 4 பேர் குறைவாக வாக்குகள் பெற்று இருப்பதாகவும் இதில் சாந்தி மிகவும் குறைவான வாக்குகள் பெற்று இருப்பதால் அவர் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ரக்சிதா அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருப்பதாகவும் விக்ரமன் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், இன்று இவர்கள் இருவரும் கமல்ஹாசனால் சேவ் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் ஆயிஷா, நிவாஷினி, தனலட்சுமி, ராம் ராமசாமி ஆகியோர் ஓரளவு வாக்குகள் பெற்று இருப்பதால் இவர்கள் நாளை சேவ் செய்யப்படலாம் என தெரிகிறது.

இந்த நிலையில் இந்த வார சனி, ஞாயிறு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு இன்னும் சில நிமிடங்களில் தொடங்க இருக்கும் நிலையில் சில மணி நேரங்களில் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படும் போட்டியாளர் யார் என்பது குறித்த செய்தி கசியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.