close
Choose your channels

'வீரமே வாகை சூடும்' ரிலீஸ் தேதி மாறுகிறதா?

Monday, January 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் வரும் குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி மாறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 7ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த எஸ்.எஸ். ராஜமௌலியின் ’ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. மேலும் ஜனவரி 13-ஆம் தேதி ’வலிமை’ திரைப்படமும் ஜனவரி 14-ஆம் தேதி ’ராதே ஷ்யாம்’ திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ’ராதே ஷ்யாம்’ திரைப்படம் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ’வலிமை’ திரைப்படம் மட்டுமே பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் முன்கூட்டியே பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாகவும் இந்த படத்தின் யுவன்சங்கர் ராஜா பாடிய சிங்கிள் பாடல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.