close
Choose your channels

விஷாலின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நாயகி

Sunday, March 27, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால், ஸ்ரீதிவ்யா நடித்த 'மருது' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 'கொம்பன்' இயக்குனர் முத்தையா இயக்கியுள்ள இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' என்ற படத்தில் விஷால் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் விஷால் நடிக்கவுள்ள மேலும் ஒரு படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. படிக்காதவன், மாப்பிள்ளை, அலெக்ஸ்பாண்டியன், சகலகலாவல்லவன் உள்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கவுள்ளார். இவர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற விஜய்சேதுபதி நடித்த 'காதலும் கடந்து போகும்' படத்தின் நாயகி என்பது அனைவரும் அறிந்ததே
முதன்முதலாக விஷால்-சுராஜ் இணையவுள்ள இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும், இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.