close
Choose your channels

விஷாலின் 'மருது' ரிலீஸ் எப்போது?

Saturday, March 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடிப்பில் 'கொம்பன்' இயக்குனர் முத்தையா இயக்கிய 'மருது' திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த படம் வரும் மே மாதம் உறுதியாக ரிலீஸ் ஆகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.


ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை ஐங்கரன் நிறுவனம் பெற்றிருந்த நிலையில் அந்த நிறுவனத்திடம் இருந்து சேலத்தை சேர்ந்த அசோக் சாம்ராஜ் மற்றும் 7ஜி சிவா ஆகியோர் கூட்டாக இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

விஷால், ஸ்ரீதிவ்யா, ராதாரவி, சூரி, ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், ப்ரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.