close
Choose your channels

4 மொழிகளில் வெளியான விஷால் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

Wednesday, April 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷால் நடித்து வரும் படங்களில் ஒன்று ‘லத்தி’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ‘லத்தி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏப்ரல் 6ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்தனர். இந்த நிலையில் சற்று முன்னர் ‘லத்தி’ பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷால் அட்டகாசமாக போலீஸ் கெட்டப்பில் உள்ளார்.

விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ராணா மற்றும் நந்தா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வினோத் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பதும் இந்த படத்தின் நாயகியாக சுனைனா நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.