close
Choose your channels

ஜூவாலா கட்டாவுடன் திருமணம் எப்போது? விஷ்ணு விஷால் பேட்டி

Sunday, March 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலித்து வருகிறார் என்பதும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜூவாலா கட்டாவுடன் திருமணம் என்பதை ஏற்கனவே உறுதி செய்த விஷ்ணு விஷால் திருமண தேதியை விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்

மேலும் ஜூவாலா கட்டா திருமணத்திற்கு தயாராகும் புகைப்படங்களும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது திருமணம் குறித்த கேள்வி ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறிய விஷ்ணுவிஷால், ’ஜூவாலா கட்டாவுடன் ஏப்ரல் இறுதியில் திருமணம் நடைபெறும் என்றும் திருமண தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் கூறினார்

விஷ்ணு விஷால் நடித்த ’காடன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது ’ஜெகஜால கில்லாடி’ ’எப்ஐஆர்’ மற்றும் ’மோகன்தாஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.