close
Choose your channels

அஜித்தின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம்

Wednesday, February 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் 50வது நாளை நோக்கி திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை கன்னட மொழியில் டப்பிங் செய்யும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. 'ஜகா மல்லா' என்ற டைட்டிலுடன் இந்த படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று இந்த படம் சென்சாருக்கு சென்றது.

சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து தமிழுக்கு கொடுத்த அதே 'யூ' சான்றிதழை அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 153.34 நிமிடங்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வாசம் படத்தின் ரன்னிங் டைம் 152.34 என்பதால் கன்னட டப்பிங் ஒரு நிமிடம் அதிக ரன்னிங் டைமை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.