close
Choose your channels

'விவேகம்' ரசிகர்களுக்கு ஒரு விசேஷ செய்தி

Saturday, July 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் படம் என்றாலே அன்று ஒரு சிறப்பு தீபாவளி போல் அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் அந்த விசேஷமான நாள் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரவுள்ளது. உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள இந்த படம் 'பாகுபலி 2' படத்தை அடுத்து பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் சென்சாருக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது 'விவேகம்' படத்தை வரும் திங்கள் அன்று சென்சார் அதிகாரிகள் பார்க்க அதிக வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித்தின் மற்ற படங்கள் போலவே இந்த படமும் 'யூ' சான்றிதழ் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்சார் சான்றிதழ் கைக்கு கிடைத்ததும் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவிக்க தயாரிப்பு நிறுவனம் தயார் நிலையில் உள்ளது என்பதும் அஜித் ரசிகர்களுக்கு ஒரு விசேஷ செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.