close
Choose your channels

பழைய யுவன், புது யுவன் எல்லாம் கிடையாது, ஒரே யுவன் தான்: பாட்டு கேட்ட இயக்குனருக்கு பதில் சொன்ன யுவன்!

Sunday, July 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தன்னிடம் பாட்டு கேட்ட இயக்குனர் ஒருவரிடம் பழைய யுவன் எனக்கு வேண்டும் என்று கேட்டபோது பழைய யுவன், புது யுவன் என்று கிடையாது ஒரே ஒரு யுவன் தான் என்று யுவன் சங்கர் ராஜா பதிலளித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தற்போது ’லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அவரே நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் கம்போஸ் குறித்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோவில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தனக்கு பழைய யுவன் வேண்டும் என்றும் அப்போதுதான் மாஸாக பாடல் இருக்கும் என்றும் கூறினார். உடனே யுவன் சங்கர் ராஜா எழுந்து ஒரு பெட்டியில் உள்ள சிறு வயது யுவன் புகைப்படத்தை எடுத்துக் கொடுத்து இதுதான் பழைய யுவன் என்று கூறுகிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதீப்பிடம் யுவன்ஷங்கர் ராஜா கூறியபோது, பழைய யுவன் புது யுவன் என்றெல்லாம் கிடையாது, ஒரே ஒரு யுவன் தான் என்று கூறி என்ன பாடல் என்று கேட்கிறார். அதற்கு பாடல் உருவாகும் காட்சியையும் பாடல் வரிகளையும் பிரதீப் கூற உடனே யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செயும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.

மேலும் இந்த பாடல் ஆகஸ்ட் 1ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுவராசியமான வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.