close
Choose your channels

யோகிபாபுவின் 'ஜாம்பி' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Wednesday, June 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு முதல்முறையாக முக்கிய வேடத்தில் நடித்த 'தர்மபிரபு' திரைப்படம் இம்மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர் முக்கிய வேடத்தில் நடித்த அடுத்த படமான 'ஜாம்பி' திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 'ஜாம்பி' திரைப்படத்தின் டீசர் வரும் 7ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் வெள்ளியன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

யோகிபாபு, யாஷிகா ஆனந்த், மனோபாலா, சுதாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை புவன் நல்லான் இயக்கியுள்ளார். பிரேம்ஜி அமரன் இசையில் விஷூஸ்ரீ ஒளிப்பதிவில் தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.