close
Choose your channels

தனுஷ்-சினேகா படத்தின் புதிய அப்டேட்!

Wednesday, June 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் துரைசெந்தில்குமார் இயக்கி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட்டாக இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 24ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள்ளது. மேலும் தனுஷ் இந்த படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கின்றார் என்பதும், ஒரு கேரக்டருக்குத்தான் சினேகா ஜோடி என்றும் இன்னொரு கேரக்டருக்கு ஒரு முன்னணி நடிகை ஜோடியாக நடிக்கவிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது

இயக்குனர் துரைசெந்தில்குமார் ஏற்கனவே தனுஷ் தயாரித்த 'எதிர்நீச்சல்', 'காக்கி சட்டை' படங்களையும், தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்த 'கொடி' படத்தையும் இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.