close
Choose your channels

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவின் படங்கள்

Wednesday, December 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை சர்வதேச திரைப்பட விழா இந்த மாதம் 15 முதல் 22ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்து. ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினை அடுத்து இந்த விழா ஒத்தி வைக்கப்பட்டு வரும் ஜனவரி 5 முதல் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த விழாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் நடித்த அடிமைப்பெண்`, மற்றும் ஆயிரத்தில் ஒருவன்` ஆகிய இரண்டு திரைப்படங்களையும் சிறப்பு திரைப்படங்களாக திரையிட விழாக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த முறையான அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ஏற்கனவே இந்த விழாவில் '24, அம்மா கணக்கு, தேவி, தர்மதுரை, இறைவி, ஜோக்கர், கர்மா, நானும் ரௌடி தான், பசங்க-2, ரூபாய், சில சமயங்களில், உறியடி' ஆகிய 12 தமிழ்ப்படங்கள் திரையிடப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.