close
Choose your channels

காமராஜருடன் இருக்கும் இந்த சிறுவன், பிரபல காமெடி நடிகர்: யாரென கண்டுபிடியுங்கள்?

Sunday, July 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகர் ஒருவர் ஏழு வயதில் இருக்கும் போது காமராஜர் முன் பாடி அசத்தியதாக கூறி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அவர்தான் பிரபல காமெடி நடிகர் சின்னிஜெயந்த்

பிரபல இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கை கொடுக்கும் கை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான சின்னி ஜெயந்த், அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘கிழக்கு வாசல்’ ’இதயம்’ ’கண்ணெதிரே தோன்றினாள்’ ’சின்ன புள்ள’ போன்ற படங்களில் அவரது நடிப்பை வெளிப்படுத்தும் படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் சின்னிஜெயந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் காமராஜருடன் ஏழு வயதாக இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து, ‘ஏழு வயதில் மதிப்பிற்குரிய திரு காமராஜ் ஐயா முன் பாடினேன், நல்ல கலைஞனாய் வருவாய் என்று ஆசீர்வதித்தார், வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்’ என்று கூறியுள்ளார்.

சின்னிஜெயந்த் தற்போது கற்றவை, ஓவர்நைட், திரும்பி வா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்றும் மூன்றுமே வித்தியாசமான கதை அம்சம் கொண்ட நல்ல படங்கள் என்றும் அவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி நடித்த ’யாதும் ஊரே யாவரும் கேளிர்படத்தில்’ ஒரு முக்கிய கேரக்டரில் சின்னி ஜெயந்த் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.