close
Choose your channels

தயாரிப்பாளர் ஆகிறார் அதர்வா

Saturday, January 2, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அதர்வா நடித்த 'ஈட்டி' சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவர் நடித்து வரும் 'கணிதன்' மற்றும் 'ருக்குமணி வண்டி வருது' ஆகிய படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவற்றில் கணிதன்' மிக விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் அதர்வா தற்போது புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. "Kiick ass Entertainment".என்ற பெயரில் அதர்வா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும், இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை 'பாணா காத்தாடி' படத்தின் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் பத்ரி வெங்கடேஷ் கூறிய கதை அதர்வாவை வெகுவாக கவர்ந்து விட்டதால் இந்த படத்தை அவரே தயாரிக்க முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது. இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் அதர்வாவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.