close
Choose your channels

கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்: திரையுலகினர் இரங்கல்!

Sunday, July 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் ஒருவர் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தவர் தீபேஷ் பன். இவர் நடித்த பல தொலைக்காட்சி தொடர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது என்பதும் குறிப்பாக ’பாபிஜி கர் பர் ஹேன்’ என்ற தொடர் இவரது நடிப்பிற்கு மிகச் சிறந்த சான்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் மும்பையில் வசித்து கொண்டிருந்த தீபேஷ் பன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்தார். இதனையடுத்து உடனடியாக அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்

மரணமடைந்த தீபேஷ் பன் அவர்களுக்கு மனைவி மற்றும் ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தீபேஷ் பன் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி கேட்டு பாலிவுட் சின்னத்திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது மறைவிற்கு சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.