close
Choose your channels

விஜய் ரசிகர்களை அடுத்து டார்ச்சர் செய்ய தயாராகும் தனுஷ் ரசிகர்கள்: இளம் நடிகர் அச்சம்

Thursday, February 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் குட்டி பவானி கேரக்டரில் நடிகர் மகேந்திரன் நடித்து இருந்தார் என்பதும் அவரது கேரக்டரும் ரசிகர்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகர் மகேந்திரன் சமீபத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் 'D43' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த தகவலை இயக்குனர் கார்த்திக் நரேன் சமீபத்தில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தில் மகேந்திரன் நடித்துக் கொண்டிருக்கும் போது விஜய் ரசிகர்கள் அவரிடம் தொடர்ச்சியாக அப்டேட் கேட்டு வந்தனர் என்பதும் அவரும் தனக்கு தெரிந்த ஒரு சில தகவல்களை தெரிவித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் ரசிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் ’விஜய் ரசிகர்களை விட அதிக அளவு மாஸ்டர் மகேந்திரனை டார்ச்சர் செய்து 'D43' அப்டேட் கேட்க ரெடியாக இருங்கள், அவரை சும்மா விடுவதா இல்லை’ என்று பதிவு செய்துள்ளார். இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள நடிகர் மகேந்திரன், ‘இந்த நினைத்தால் கொஞ்சம் பயமா இருக்கு’ என்று காமெடியாக குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.