close
Choose your channels

எம்.ஆர்.ராதா மனைவியின் இளமைக்கால புகைப்படங்கள்.. அன்னையர் தினத்தில் வெளியிட்ட நடிகை..!

Sunday, May 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் நடிகர் நடிகவேள் எம்ஆர் ராதாவின் மனைவி இளமைக் காலத்தில் இருந்த புகைப்படங்களை அவரது மகளும் நடிகையுமான நிரோஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

நடிகவேள் எம்.ஆர்.ராதா நான்கு திருமணங்கள் செய்து கொண்டார் என்பதும் அவர்களில் ஒருவர் கீதா என்பதும் குறிப்பிடத்தக்கது. எம்ஆர் ராதாவுக்கும் கீதாவுக்கும் பிறந்தவர்கள் தான் நடிகைகள் ராதிகா மற்றும் நிரோஷா.

இந்த நிலையில் நடிகை நிரோஷா தனது இன்ஸ்டாகிராம் தனது அம்மா கீதாவின் புகைப்படத்தை வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் ’என்னுடைய அம்மா மிகவும் ஸ்ட்ராங்கானவர், மேலும் நானும் என் சகோதரிகளும் வலிமையானவர்கள். பெண்களின் வலிமை மற்றும் ஆற்றல் எப்போதும் எங்களுக்கு உண்டு. எங்களது மிகப்பெரிய நம்பிக்கையாக அம்மா இருந்தார், அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் தனது அம்மா கீதாவின் இளமைக்கால புகைப்படங்களையும் நிரோஷா பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். குறிப்பாக நிரோஷா கைக்குழந்தையாக இருக்கும் புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.