close
Choose your channels

அதிதி ஷங்கரின் அடுத்த பட ஹீரோ இவரா?  சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா?

Wednesday, April 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடித்த ‘விருமன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பதும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்த தற்போது அவர் சிவகார்த்திகேயனுடன் ’மாவீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். ’முண்டாசுப்பட்டி’ மற்றும் ’ராட்சசன்’ ஆகிய இரண்டு படங்களை அடுத்து மூன்றாவது முறையாக விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் இணைய இருப்பதை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த படத்தின் நாயகி ஆகத்தான் அதிதி சங்கர் நடிக்க இருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மே முதல் வாரம் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் ‘முண்டாசுப்பட்டி’ படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வா சகோதரர் ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்கும் படத்திலும் அதிதி ஷங்கர் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்பது தெரிந்தது..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.