close
Choose your channels

நீலக்கடலில் நீச்சல் உடை… அசத்தல் புகைப்படம் வெளியிட்ட ஹன்சிகா மோத்வானி!

Tuesday, November 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. க்யூட் பப்ளியாக இளைஞர் மனதில் குடிகொண்டிருந்த இவர் சமீபத்தில் உடல்எடையை குறைத்து ஸ்லிம் பிட் நடிகையாகிவிட்டார். இதனால் இளைஞர்கள் கடும் வருத்தத்தை வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் “எங்கேயும் காதல்“, “பிரியாணி“, “சேட்டை“, “சிங்கம்“, “போகன்“, “அரண்மனை“ போன்ற வெற்றிப்படங்களில் நடித்த நடிகை ஹன்சிகா தற்போது “ரவுடி பேபி“, “பார்டர்“ போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவருடைய 50 ஆவது திரைப்படமான “மஹா“ விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் தெலுங்கில் “நஷா“ எனும் வெப் தொடரிலும் இவர் நடித்து வருகிறார்.

நடிகை ஹன்சிகா பிசியான நடிப்பிற்கிடையே சமூகவலைத் தளங்களிலும் ஆக்டிவாகவே செயல்பட்டு வருகிறார். சுற்றுலா சென்ற புகைப்படங்கள். சமீபகாலமாக பிகினி புகைப்படங்கள் போன்றவற்றை இதில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நடிகை ஹன்சிகாவின் படு அசத்தலான டிரான்ஸ்பர்மேஷனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா நீல வானத்திற்கு கீழே, பரந்து விரிந்திருக்கும் நீல கடலுக்கு இணையாக நீச்சல் உடையில் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.