close
Choose your channels

நடிகை குஷ்புவுக்கு என்ன ஆச்சு?  வைரலாகும் மருத்துவமனை புகைப்படங்கள்

Friday, April 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ சென்னை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரே தெரிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

பிரபல நடிகையும் பாஜகவின் முக்கிய நிர்வாகியான குஷ்பூ, தான் அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் அவரது கையில் ஊசி இருப்பது போன்ற புகைப்படமும் வெள்ளிக்கிழமை என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் குஷ்பு விரைவில் குணமாக வேண்டுமென்று மருத்துவமனையின் சார்பில் அளிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளையும் குஷ்பு பகிர்ந்துள்ளார். மேலும் குஷ்பூ தன்னை அப்போலோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனை மருத்துவர்கள் நன்றாக கவனித்துக் கொண்டார்கள் என்றும் அவர்களுக்கு தனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.



இதனை அடுத்து குஷ்புவுக்கு என்ன ஆச்சு? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் குஷ்பூ எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.