close
Choose your channels

56 வயதிலும் வேற லெவல் வொர்க்-அவுட்; நதியாவின் வேற லெவல் வீடியோ..!

Friday, March 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நதியாவுக்கு தற்போது 56 வயது ஆகிய போதிலும் இன்னும் டீன் ஏஜ் பெண் போல் சுறுசுறுப்பாகவும் இளமையாகவும் தோற்றமளிப்பது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த நிலையில் இந்த வயதில் அவர் வேற லெவலில் வொர்க்-அவுட் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

கடந்த 1985 ஆம் ஆண்டு ஃபாசில் இயக்கத்தில் உருவான ’பூவே பூச்சூடவா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகையாக அறிமுகமான நதியா, அதன் பிறகு ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, சிவகுமார், சுரேஷ், மோகன் உள்பட பல பிரபலங்களுடன் நடித்துள்ளார் என்பதும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகளாகவும் ’அன்புள்ள அப்பா’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நதியா கடந்த 1988 ஆம் ஆண்டு ஷிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நதியா அதன் பிறகு நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜெயம் ரவி நடித்த ’எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார். அதனை அடுத்த ஒரு சில படங்களில் தற்போதும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வயதிலும் அவர் வேற லெவலில் வொர்க் அவுட் செய்து வருகிறார் என்றும், அனைத்து பெண்களுக்கும் அவர் உத்வேகம் அளிக்கின்றார் என்றும் ஏராளமான ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.