close
Choose your channels

பாஜகவில் திடீரென இணைந்த பிரபல தமிழ் நடிகை!

Saturday, November 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மத்தியில் வலுவாக ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க அல்லது குறைந்தபட்சம் கட்சியை வளர்க்க அக்கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனை அடுத்து அந்த கட்சியின் நிர்வாகிகள் திரையுலக பிரமுகர்களை அவ்வப்போது சந்தித்து தங்கள் காட்சிகள் இணைய கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பதும் அந்த கோரிக்கையை ஏற்று ஒரு சில திரையுலகினர் பாஜகவில் இணைந்து உள்ளனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பாஜக செயல் தலைவர் ஜேபி நட்டா அவர்கள் இன்று தமிழகத்திற்கு வருகை தந்தார். தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், பாஜகவை தமிழகத்தில் வளர்ப்பது குறித்தும் அவர் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்

இந்த நிலையில் ஜேபி நட்டா அவர்களின் முன்னிலையில் பிரபல நடிகை நமீதா பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். பிரபல நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் பாகத்தில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவருமான நடிகை நமீதா கடந்த சில மாதங்களாகவே அரசியலில் ஈடுபட இருக்கிறார் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அவர் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இன்னொரு போட்டியாளரான காயத்ரி ரகுராம் ஏற்கனவே பாஜகவில் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நமீதாவின் இணைப்பு பாஜகவின் வளர்ச்சியில் எந்த அளவுக்கு உதவப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.