close
Choose your channels

சகோதரிகளுடன் சமீபத்தில் திருமணமான தமிழ் நடிகை: வைரல் புகைப்படம்!

Saturday, March 6, 2021 • தமிழ் Comments

சமீபத்தில் திருமணமான தமிழ் நடிகை ஒருவர் தனது சகோதரிகளுடன் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்தப் புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

சமீபத்தில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை அதே திரைப்படத்தில் நடித்த நிரஞ்சனா திருமணம் செய்துகொண்டார் என்பது தெரிந்தது. இந்த திருமணத்திற்கு கோலிவுட் திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் திருமண பரிசாக ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட தயாரிப்பாளர் இந்த தம்பதிக்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நிரஞ்சனியின் சகோதரியும் நடிகையுமான விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராமில் நிரஞ்சனியின் திருமண புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் ஒரு சூப்பரான புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் நிரஞ்சனி, விஜயலட்சுமி மற்றும் குக் வித் கோமாளி புகழ் கனி ஆகியோர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது சகோதரிகளுடன் புதுமணப்பெண் நிரஞ்சனி இருக்கும் இந்த அழகான புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz