close
Choose your channels

கோவாவில் வில்வித்தை பயிற்சியில் ஈடுபடும் பிக்பாஸ் நடிகை!

Sunday, December 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய சாக்ஷி அகர்வால் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக கோவா சென்றுள்ளார். அங்கிருந்து அவர் விதவிதமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கோவாவில் சாக்சி அகர்வால் வில்வித்தை பயிற்சி பெற்று வருகிறார். இதுபோன்ற புதிய கலையை பயிற்சி பெற்றுக் கொள்வதில் தனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு என்றும் இந்த கோவா விடுமுறையை வில்வித்தை கற்றுக் கொள்வதில் ஈடுபட்டு உள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்

மேலும் அவர் தற்போது ’புரவி’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் அந்த திரைப்படத்தில் வில்வித்தை சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பதால் அந்த படத்திற்காகவும் அவர் இந்த பயிற்சியை எடுத்துக் கொண்டு இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரண்மனை 3’ மற்றும் ஆர்யாவுடன் ’டெடி’ மற்றும் ’ஆயிரம் ஜென்மங்கள்’ ’சிண்ட்ரெல்லா’ ஆகிய படங்களில் சாக்ஷி அகர்வால் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.