close
Choose your channels

'ஆர்.ஆர்.ஆர்' டிரைலரை பார்த்து சமந்தா கூறியது என்ன தெரியுமா?

Thursday, December 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த டிரைலரை பார்த்த பிரபல நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்தில் உள்ள ஹீரோக்களில் ஒருவரின் புகைப்படத்தை பதிவு செய்து ’உங்களால் எதையும் செய்ய முடியும்’ என்று கூறியுள்ளார்.

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் ஹீரோக்களாக நடித்த திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியான நிலையில் இந்த டிரைலரை பார்த்து ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் வியந்து தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, இந்த ட்ரெய்லரில் புலியுடன் ஜூனியர் என்டிஆர் மோதும் காட்சியின் புகைப்படத்தை பதிவு செய்து, ‘இந்த காட்சியை 100% உண்மை என்று நான் நம்பினேன், எந்த சந்தேகமும் இல்லைம் உங்கள் கண்களில் உள்ள நெருப்பால் உங்களால் எதையும் செய்ய முடியும்’ என்று பதிவு செய்துள்ளார். அதேபோல் ராம்சரண் தேஜா குறித்து சமந்தா கூறியபோது, ‘ராம்சரண் தேஜாவிடம் நான் பார்த்த மிகப்பெரிய மாற்றம் இதுதான்’ என்று கூறியுள்ளார்.

‘ஆர்.ஆர்.ஆர்’ இயக்குனரின் ‘நான் ஈ’ திரைப்படத்தில் சமந்தா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.