close
Choose your channels

பல லட்சத்தை ஏமாற்றி, மிரட்டல் விடுத்ததாக நடிகை சினேகா போலீசில் திடீர் புகார்!

Thursday, November 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சினேகா தன்னிடம் இருந்து ரூ.26 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு திருப்பிக் கேட்டால் மிரட்டல் விடுப்பதாகத் தனியார் நிறுவன தொழிலதிபர்கள் மீது சென்னை, கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதும் இந்தத் தம்பதிகளுக்குத் தற்போது 2 குழந்தைகள் இருப்பதும் ரசிகர்களுக்குத் தெரிந்ததுதான்.

இந்நிலையில் கவுரி மினரல் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனத்தைச் சார்ந்த தம்பதிகள் 2 பேர் தன்னைச் சந்தித்தாகக் கூறிய நடிகை சினேகா தங்களுடைய நிறுவனத்தில் ரூ.25 லட்சத்தை முதலீடு செய்தால் மாதா மாதம் ரூ.1.80 லட்சம் லாபம் பெறலாம் என்று அவர்கள் கூறியதாகவும் தற்போது பணத்தைப் பெற்றுக்கொண்டு திருப்பிக் கேட்டால் அவர்கள் தன்னை மிரட்டுவதாகவும் நடிகை சினேகா கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை சினேகா அளித்துள்ள புகார் மனுவில் கவுரி மினரல் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனத்திற்கு ஆன்லைன் வாயிலாக ரூ.25 லட்சம் மற்றும் நேரில் 1 லட்சத்தை முதலீடாக செலுத்தியுள்ளேன் என்றும் இதுதொடாபாக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் முதலீட்டை செலுத்தி 5 மாதங்களாகியும் தனக்கு எந்த லாபமும் கிடைக்காத நிலையில் முதலீட்டு பணத்தைப் பற்றிக் கேட்டால் அந்நிறுவனத்தைச் சார்ந்த தொழிலதிபர்கள் தன்னை மிரட்டுவதாகக் காவல் துறையில் நடிகை சினேகா புகார் அளித்தள்ளார்.

இதுதொடர்பாக ஆன்லைன் வாயிலாக ஒரு புகார் கடித்தத்தை நடிகை சினேகா கமிஷர் அலுவலகத்திற்கு அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக நடிகை சினோக புகார் அளித்திருப்பது தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.