close
Choose your channels

பிரபல தமிழ் நடிகைக்கு கொச்சியில் திருமணம்: குவியும் வாழ்த்துக்கள்

Saturday, September 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகுமார் நடித்த 'சுப்பிரமணியபுரம்' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'கனிமொழி', 'போராளி', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ஸ்வாதி ரெட்டி.

இவர் கடந்த சில வருடங்களாக மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக பணிபுரியும் விகாஸ் என்பவரை காதலித்து வந்ததாகவும் விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கொச்சியில் விகாஸ்-ஸ்வாதி ரெட்டி திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் இருவீட்டார்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். மேலும் வரவேற்பு நிகழ்ச்சி அதே கொச்சியில் நாளை நடைபெறவுள்ளதாகவும், இந்த நிகழ்ச்சியில் திரையுலகினர் பலர் கலந்து கொள்ளவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஸ்வாதிக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.