close
Choose your channels

23 வருடங்களுக்கு பின் பிரபுவுடன் ஜோடி சேரும் நடிகை!

Tuesday, April 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 1996ஆம் ஆண்டு இயக்குனர் சீமான் இயக்கத்தில் பிரபு நடித்த 'பாஞ்சாலங்குறிச்சி' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் 'ரோஜா' புகழ் மதுபாலா. இந்த நிலையில் 23 வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் பிரபு-மதுபாலா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர்.

ராகுல் விஜய், பிரியா வத்லமணி முக்கிய வேடங்களில் நடிக்கும் 'காலேஜ் குமார்' என்ற படத்தை இயக்குனர் ஹரி சந்தோஷ் இயக்கவுள்ளார் இந்த படத்தில் தான் பிரபு, மதுபாலா மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் நாசர், மனோபாலா, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பள்ளியில் பயின்ற குதுப் ஈ கிர்பா என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.