220 மீட்டர் உயரம்.. 55வது மாடி.. துபாயில் 'எட்ஜ் வாக்' செய்த தமிழ் நடிகை.. வைரல் வீடியோக்கள்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
துபாய் செல்லும் சுற்றுலா பயணிகள் 55வது மாடியில் 220 மீட்டர் உயரத்தில் உள்ள ‘எட்ஜ் வாக்’ என்ற அற்புதமான அனுபவத்தை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் சமீபத்தில் துபாய்க்கு சுற்றுலா சென்ற நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் துபாய் சுற்றுலா அனுபவங்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ள நிலையில் அவை தற்போது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.
’காதலில் சொதப்புவது எப்படி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதன் பின் ’ஆப்பிள் பெண்ணே’ ’தீயா வேலை செய்யணும் குமாரு’ ’தமிழ் படம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ’ஸ்பை’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் மூன்று மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார். அவர் சற்று முன்னர் துபாயில் ‘எட்ஜ் வாக்’ அனுபவம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். திரில் அனுபவங்களை கொண்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.