close
Choose your channels

12 ஆண்டுகளுக்கு பின் அஜித்துடன் இணைந்த பிரபல நடிகர்: வைரல் புகைப்படம்!

Monday, September 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’ஏகன்’ என்ற திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர் 12 ஆண்டுகளுக்குப் பின் அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தல அஜித் சமீபத்தில் ரஷ்யாவில் நடைபெற்ற’வலிமை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பதும் அங்கே அவர் பைக் பயிற்சி செய்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் சென்னை திரும்பிய அஜித், ஐதராபாத்தில் நடைபெற்ற பைக் ரேஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் பிரபல நடிகர் நவ்தீப் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

அஜித்துடன் ’ஏகன்’ என்ற படத்தில் இணைந்து நடித்து, அப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது அஜித்துடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ’அஜித் ஒரு அன்பான மனிதர் என்றும், அவர் ஹாய் சொன்ன விதமே நாங்கள் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்ட உணர்வை ஏற்படுத்தியது என்றும், அவரது எளிமை, நுட்பமான அறிவு ஆகியவை ஒரு அருமையான அனுபவமாக இருந்தது என்றும், உண்மையிலேயே அஜித் ஒரு அற்புதமான மனிதர் என்று தெரிவித்துள்ளார். நவ்தீப் பகிர்ந்த இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.