close
Choose your channels

அஜித்தின் 'அடிச்சு தூக்கி' தூக்கிய சாதனை

Tuesday, December 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் சிங்கிள் பாடலான 'அடிச்சு தூக்கு பாடல் வெளியானது.

அஜித் குறித்த ஒரு சிறிய செய்தி வந்தாலே அதை டிரெண்டாக்கும் அஜித் ரசிகர்கள், நீண்ட காத்திருப்புக்கு பின் வெளிவந்த சிங்கிள் பாடல் என்றால் சும்மா விடுவார்களா? நேற்று இரவு 7 மணியில் இருந்து இணையதளங்கள் அதிர்ந்தன.

இந்த நிலையில் 'அடிச்சு தூக்கு' பாடல் வெளியாகி 12 மணி நேரம் முடிந்துள்ள இந்த பாடலை சுமார் 35 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதுவொரு புதிய சாதனையாக கருதப்படுகிறது. அதேபோல் இந்த பாடலுக்கு சுமார் 4,55,000 லைக்ஸ்கள் கிடைத்துள்ளது. ஒவ்வொரு நிமிடமும் ஆயிரக்கணக்கில் பார்வையாளர்கள், லைக்ஸ்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருப்பதால் இந்த பாடல் வீடியோ உலக அளவில் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.