close
Choose your channels

ஷங்கரின் அடுத்த படத்தில் அஜித் வில்லனா? 'ரோலக்ஸ்' மாதிரி மாஸ் கேரக்டரா?

Tuesday, March 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷங்கரின் அடுத்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் ’விக்ரம்’ படத்தில் வரும் ரோலக்ஸ் கேரக்டர் போல் மாஸ் கேரக்டர் இது என்றும் கூறப்படுவது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஆர்சி 15’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் ஒரு மாஸ் வில்லன் கேரக்டரில் ஒரு பெரிய நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்காக அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

‘விக்ரம்’ படத்தில் வரும் ரோலக்ஸ் கேரக்டர் போலவே இந்த கேரக்டரும் மாஸ் கேரக்டர் என்றும் இந்த படத்தின் அடுத்த பாகம் உருவாக்கப்பட்டால் அதில் மெயின் வில்லன் கேரக்டராகவும் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை, அஜித் இடமிருந்து இதற்கு என்ன பதில் வந்தது என்பதை எல்லாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.