close
Choose your channels

விஜய் ரசிகர்கள் குறித்து போனிகபூர் சொன்னது என்ன தெரியுமா?

Friday, February 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய இரண்டு திரைப்படங்களை தொடர்ச்சியாக தயாரித்துள்ளார் என்பதும், அஜித் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தையும் போனிகபூர் தான் தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் அடுத்த வாரம் ரிலீசாக இருக்கும் நிலையில் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது கருத்தை கூறியுள்ளார்.

அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இருவருமே என்னை பொருத்தவரை மிகவும் பெருந்தன்மையான மனதை உடையவர்கள் என்றும் அஜித்தின் நல்ல படங்கள் வெளியாகும்போது விஜய் ரசிகர்கள் அதனை பாராட்டுகிறார்கள் என்றும், அதேபோல் விஜய்யின் நல்ல திரைப்படங்கள் வெளியாகும் போது அஜித் ரசிகர்கள் பாராட்டுவதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றும் இரு தரப்பு ரசிகர்களை மிகவும் பெருந்தன்மையானவர்கள் என நான் பார்க்கின்றேன் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது மோதிக் கொண்டாலும் அஜித்தின் நல்ல படங்களை விஜய் ரசிகர்களும் விஜய்யின் நல்ல படங்களை அஜித் ரசிகர்களும் பாராட்டுவதை தான் போனிகபூர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.