close
Choose your channels

பொன்னம்பலத்தை டார்கெட் செய்யும் பிக்பாஸ் போட்டியாளர்கள்

Tuesday, July 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொதுவாக பிக்பாஸ் வீட்டில் தனிப்பட்ட ஒருவருக்கு புகழ் கூடுவது போல் தெரிந்தால் அவரை அனைவரும் சேர்ந்து கார்னர் செய்து வெளியேற்றிவிடுவார்கள், அல்லது அவரே வெளியேறும்படி செய்துவிடுவார்கள். அதுதான் ஓவியாவின் விஷயத்தில் நடந்தது.

அதேபோல் இந்த முறை பொன்னம்பலத்தை ஒட்டுமொத்தமாக சேர்ந்து கார்னர் செய்ய முயற்சி செய்கின்றனர். போகிற போக்கில் அனந்து, பொன்னம்பலத்துக்கு கொடுத்த சிறைத்தண்டனை பலருடைய முகமூடியை கிழித்து தொங்கவிட்டுவிட்டது. இந்த பிரச்சனையால்தான் ஐஸ்வர்யா, யாஷிகா, மகத், ஷாரிக் மற்றும் அனந்துவின் மற்றொரு முகம் வெளிப்பட்டது. அதுமட்டுமின்றி பொன்னம்பலத்திற்கு ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு அவருக்கு நெட்டிசன்களிடையே வரவேற்பு கிடைத்துவிட்டது.

இதனை புரிந்து கொண்ட பிக்பாஸ் ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் பொன்னம்பலத்தை கார்னர் செய்யும் வகையில் வசனங்கள் எழுதி கொடுத்து வருகிறார்கள். சற்றுமுன் வெளியான புரமோ வீடியோ இதனை வெளிப்படுத்துகிறது. 'பகல்லா தோத்துருவேன், ராத்திரியில ஜெயிச்சுடுவேன்' என்று பொன்னம்பலம் கூறிய வார்த்தையை வைத்து பொன்னம்பலத்தை அனைவரும் சேர்ந்து கார்னர் செய்தாலும் அவருக்கு மக்கள் ஆதரவு இருப்பதால் அவரை வெளியேற்ற முடியாது, அதேபோல் இந்த வாரம் யாஷிகாவை வெளியேற்றுவதையும் யாராலும் தடுக்க முடியாது.


 

???? #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/9LinfXjbmv

— Vijay Television (@vijaytelevision) July 10, 2018

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.