close
Choose your channels

'இரவின் நிழல்' உலகின் முதல் நான்லீனியர் படமா? உண்மையை உடைத்த அமேசான்!

Sunday, November 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த 'இரவின் நிழல்' என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் கடந்த ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த படம் தற்போது அமேசான் ஓடிடியில் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாகவே விரைவில் அமேசான் ஓடிடியில் ’இரவின் நிழல்’ திரைப்படம் வெளியாக இருப்பதாக பார்த்திபன் கூறி வந்த நிலையில் தற்போது அவர் தனது டுவிட்டரில் 'மகிழ்ச்சியை கூட… அறிவித்து அனுபவிக்க முடியவில்லை. அமேசானில் ‘இரவின் நிழல்’ எனக்கேத் தெரியாமல்! Please நேரம் ஒதுக்கி முழுமையாய் பாருங்கள்(single shot) ஆதரவை தர வேண்டுகிறேன்! நன்றியுடன்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ள இந்த படம் குறித்து அமேசான் சில குறிப்புகளை வெளியிட்டு உள்ளது. அதில் ’இரவின் நிழல்’ திரைப்படம் உலகின் இரண்டாவது நான்லீனியர் திரைப்படம் என்றும் இந்த படத்தின் இயக்குனர் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் என்று கூறுவது உண்மையல்ல என்றும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே புளூ சட்டை மாறன் இந்த படத்திற்கு முன்பாகவே ஒரு நான்லீனியர் படம் ஒன்று வந்துள்ளது என ஆதாரத்துடன் பதிவு செய்த நிலையில் அப்போது பார்த்திபன் அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது ’இரவின் நிழல்’ இரண்டாவது நான்லீனியர் படம் என்பதை அமேசான் உறுதி செய்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இது உலகின் முதல் நான்லீனியர் படம் தான் என ஒருசில நெட்டிசன்கள் கூறி அதற்கான சில ஆதாரங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.